நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 79 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

Report Print Thirumal Thirumal in கல்வி
30Shares

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளை பெற்றக்கொண்டுள்ளது.

இவ்வித்தியாலயத்தில் கலை, வர்த்தகம், பொறியியற்தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகள் காணப்படுகின்றன.

இந்த பிரிவுகளில் இருந்து 2016 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் 79 சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகமையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொறியியற் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியவர்களில் எஸ்.உதயகுமார் 1பி 2சி பெறுபேற்றையும் எஸ்.அம்சன் 3சி பெறுபேற்றையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 67 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியை பெற்றுள்ளனர்.

உயிரியல் தொழிநுட்ப பிரிவில் எம்.தனுஷா 2பி 1சி பெறுபேற்றை பெற்றுள்ளதுடன் 79 சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை பெற்றள்ளனர்.

வர்த்தக பிரிவில் பி.திவ்யா மற்றம் எம்.ரிசிகேசினி ஆகிய மாணவிகள் 3ஏ பெறுபேற்றை பெற்றுள்ளதுடன் 100 சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கலை பிரிவில் இருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களில் 2ஏ 1பி பெறுபேற்றை எஸ்.சரண்யா என்ற மாணவி பெற்றுள்ளதுடன் 76 சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும், பாடசாலை பழைய மாணவர்களும், நோர்வூட் சமூகமும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றனர்.

Comments