பேராதனைப் பல்கலைக்கழக பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்பு கிடையாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடி வதைச் சம்பவத்துடன் எமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.
எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வன்மையாக எதிர்க்கின்றோம்.
இந்த பகிடிவதைச் சம்பவங்களுடன் எமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற போர்வையில் சிலர் செயற்படுகின்றனர்.
குற்றம் செய்வோருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் பகிடி வதைச் சம்பவங்கள் பல்கலைக்ழககத்திற்கு உள்ளேயே நிறுத்தப்பட வேண்டும்.
இந்த விடயங்கள் குறித்து ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்.வெறுமனே எம்மீது குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஓர் நிலையில் எமக்கு புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்துவதற்கு நேரமில்லை என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.