2018ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கும் Australia Awards சர்வதேச புலமைபரிசிலுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் masters பட்டப்படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பாக்கிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மாலைத்தீவு, பூட்டான் ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்த புலமைபரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும் என அந்த செய்தியில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த புலமைபரிசிலுக்காக இந்த https://www.australiaawardssouthwestasia.org/ இணைப்புக்குள் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.