சுகாதாரமற்ற சூழலில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளை

Report Print Ramya in கல்வி
37Shares

வவுனியா சாளம்பைக்குளம் பம்பைமடு பகுதியில் குப்பைகள் நிரம்பியுள்ளமையால்அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுற்றாடல் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்குமுகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 15 வருடங்களாக அந்த பகுதியில் உள்ள மக்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே இந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்நோக்கி வருகின்றனர்.

வவுனியா சாளம்பைக்குளம் பம்பைமடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டகுடும்பங்கள் இந்த சுற்றாடல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வுவுனியாவில் உள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் கிளை அலுவலகத்தில் கல்விப் பயிலும்மாணவர்களும் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,அண்மையிலும் கூட பம்பைமடு பகுதியில் குழந்தை ஒன்று கடும்சுகயீனத்திற்கு மத்தியில் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

குப்பைகள் நிரம்பிய பகுதிகளை எரிப்பதால் வரும் புகை தாக்கத்தாலேயே குறித்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்த வரும் புகை நச்சுத் தன்மைக் கொண்டதாக மாறும்.

எனவே இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்திய போதிலும் அவர்கள் இதற்கான தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கவில்லை.

இருப்பினும்,வவுனியா மாவட்ட அபிவிருத்தி சங்க தலைவர் ரிசாத் பதியூதின் இந்த பிரச்சினை தொடர்பில் தீர்வு பெற்றுத் தருவதாக அறிவித்துள்ளார்.

Comments