தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்தல்: ஊனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை

Report Print Kamel Kamel in கல்வி
28Shares

தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் போது ஊனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

போரின் போது உடல் ஊனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2018ம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்க்கும் சுற்று நிரூபத்தை தயாரிக்கும் குழுவிற்கு இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.

2016ம் ஆண்டில் தரம் ஒன்று வகுப்பில் மாணவர் எண்ணிக்கை 40 நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கையை குறைத்து 2021ம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கையை 35 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, படைவீரர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் ஐந்து பேரை ஒவ்வொரு வகுப்பில் சேர்த்துக் கொள்ளும் வகையில் சுற்று நிரூபம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments