புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மட்டு. மாணவர்களுக்கான முன்னாயத்த கருத்தரங்கு

Report Print Kumar in கல்வி

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை கோட்டத்திலுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னாயத்த கல்விக் கருத்தரங்கு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினரால் குறித்த கல்விக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் போது அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், ம.மே. வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், அதிபர்கள், வளவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினரால் படுவான்கரை பகுதி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான கல்வி கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.