கிழக்கு மாகாணத்தில் கல்வி வெளியீடு குறைவான நிலையிலேயே உள்ளது: ரோஹித

Report Print Kumar in கல்வி

கிழக்கு மாகாணத்தில் கல்வியின் வெளியீடு குறைவான நிலையிலேயே இருக்கின்றதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர்,

கிழக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவம் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளார்.

அதனைப்போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள நல்ல ஆளுமைமிக்க கல்வியமைச்சரை கொண்டுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் அனைவரும் இணைந்து கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் கல்வியின் வெளியீடு குறைவான நிலையிலேயே இருக்கின்றது. இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் பணிப்பாளருடனும் கலந்துரையாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.