புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Report Print Navoj in கல்வி

வாகரை கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

கண்டலடி புளியங்கன்றடி கல்வி அபிவிருத்திக் குழுத் தலைவர் சு.சிவசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து கொண்டார்.

மேலும், அதிதிகளாக வாகரை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன், கண்டலடி அருந்ததி வித்தியாலய அதிபர் எஸ்.மோகனசுந்தரம், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பிரமுகர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.