உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

Report Print Vethu Vethu in கல்வி

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய அகில இலங்கை ரீதியாக முதல் இடத்தை மாத்தறை, இரத்தினபுரி, பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த பாடசாலைகள் பெற்றுள்ளன.

அதற்கமைய இம்முறை உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் இரத்தினபுரி சந்தர்மாலங்கார பிக்கு பாடசாலையில் கல்வி கற்ற பத்பெரி தேரர் முதலிடம் பிடித்துள்ளார்.

மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் இம்முறையில் இரண்டு மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

அதற்கமைய அந்த பாடசாலையில் கல்வி கற்ற திலினி சுனீத்தா என்ற மாணவி உயிரியல் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதே பாடசாலையின் திலானி ரசான்ந்திக என்ற மாணவி வணிக பிரிவில் முதலாமிடத்தை பிடித்துள்ளார்.

பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் முதலிடம் பெற்றுள்ளார்.

வெளியாகியுள்ள முடிவுகளுக்கமைய பொறியியல் தொழில்நுட்ப பிரிவில், மாத்தறை மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஹெட்டிஆராச்சி என்ற மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார்.