க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஹட்டனில் சாதனை படைத்த மாணவர்கள்

Report Print Thirumal Thirumal in கல்வி

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவன் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, நுண்கலை பிரிவில் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவி நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 52ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

இராகலை – ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவன் 3ஏ பெறுபேற்றை பெற்றுள்ளார்.

குறித்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

மேலும், ஹட்டன் ரொதஸ் பகுதியை வசிப்பிடமாகவும், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவி நுண்கலை பிரிவில் 2ஏ, 1பீ பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 52ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.