பெறுபேறுகள் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Report Print Jeslin Jeslin in கல்வி

இவ்வருடம் கல்வி பொதுத்தாரதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார கருத்து வெளியிட்டுள்ளார்.

விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.