இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவம் பெற வேண்டும்

Report Print Ashik in கல்வி

இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவம் பெற வேண்டும் என்பதே தனது எதிர்கால இலட்சியம் என இயற்பியல் கணிதப்பிரிவில் மாவட்ட ரீதியில் 2ஆம் இடத்தை பெற்ற மன்னார் சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மாணவன் ஐ. அன்றுசன் குருஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இயற்பியல் கணிதப்பிரிவில் 2 ஏ.பி.சித்தி பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர், நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவம் பெற வேண்டும் என்பதே தனது எதிர் கால இலட்சியம் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாணவன், இருதய ராஜன், குரூஸ் பிறேமலதா தம்பதிகளின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.