புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி மாணவன் க.பொ.த உயர்தரத்தில் கண்டி மாவட்டத்தில் முதலிடம்

Report Print Thiru in கல்வி

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் புஸ்ஸலாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மணிமாறன் ஜசிதரன் பொறியிற் தொழில்நுட்ப பாட பிரிவில் கண்டி மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவன் பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்திற்கு தெரிவாவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்ப பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்குவதற்கு மேலும் 04 மாணவர்கள் விண்ணபிப்பதற்கு சகல மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், கலை பிரிவில் 04 பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்வதற்கும், 92 வீதமான மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கும் தகுதி பெற்றுள்ளனர்.

இந்து தேசிய பாடசாலையின் வரலாற்றில் அதி கூடிய மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு உள் வாங்குவதற்கு கிடைக்க பெற்ற முதல் சந்தர்ப்பம் இவே என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.