உயர் தரப் பரீட்சையில் வவுனியா செட்டிகுளம் பாடசாலை மாணவர்கள் சாதனை

Report Print Thileepan Thileepan in கல்வி

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயம் இம்முறையும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

உயிர்முறைமை தொழிநுட்ப பிரிவில் பூ.பிரதிகா 2B,C பெற்று மாவட்டத்தில் 2ஆம் நிலையையும், இ.கஜேந்திரன் 2B,C பெற்று மாவட்டத்தில் 4ஆம் நிலையையும், எம்.எஸ்.சல்மான் 2B,C பெற்று மாவட்டத்தில் 5ஆம் நிலையையும், பொறியியல் தொழிநுட்ப பிரிவில் த.பிரதீபன் 2B,C பெற்று மாவட்டத்தில் 2ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.

வணிக பிரிவில் ச.லாவன்யா 2A,B பெற்று மாவட்ட மட்டத்தில் 24ஆம் நிலையையும், ந.உதயராஜ் 2A,B பெற்று மாவட்டத்தில் 25ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.

பௌதிக விஞ்ஞான பிரிவில், இ.தமிழ்ச்செல்வன் A,2C பெற்று மாவட்டத்தில் 29ஆம் நிலையையும், ம.அயன்ராஜ் A,2S பெற்று மாவட்டத்தில் 36ஆம் நிலையையும் கலைப்பிரிவில் உ.ராகிமாABC பெற்று மாவட்டத்தில் 54ஆம் நிலையையும் பெற்று பல்கலைகக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொறியியல் தொழிநுட்ப பிரிவில் 100 வீதமான மாணவர்களும், உயிர்முறைமை தொழிநுட்ப பிரிவில் 74 வீதமான மாணவர்களும், வணிக பிரிவில் 83 வீதமான மாணவர்களும், கலை பிரிவில் 78 வீதமான மாணவர்களும் பௌதிக விஞ்ஞான பிரிவில் 50 வீதமான மாணவர்களும்,பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.