வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 43 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் 43 பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு தெரிவாகி உள்ளதாக கல்லூரி அதிபர் பா.கமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்லூரி அதிபர் பா.கமலேஸ்வரி மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இருந்து விஞ்ஞானப்பிரிவில் 5 மாணவிகளும், கணிதப் பிரிவில் 2 மாணவிகளும், வணிகப் பிரிவில் 13 மாணவிகளும் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், கலைப்பிரிவில் 16 மாணவிகளும், விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவில் 4 மாணவிகளும், ஏனைய பிரிவுகளில் 3 மாணவிகளுமாக மொத்தம் 43 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர்.

அதேவேளை, கடந்த காலங்களை விட பாடசாலையில் சித்தி வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.