யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்: மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்?

Report Print Ajith Ajith in கல்வி

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.

சம்பவத்தையடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து கலைப்பீடத்தின் நுன்கலை மற்றும் சட்ட பீடங்களை தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக நுழைவுத்தடை விதிக்கப்பட்டதுடன், விடுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்து வருகின்ற நிலையில், திங்கட்கிழமை இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதற்கமைய, சம்பவத்தில் தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.