வரலாற்றுச் சாதனை படைத்த மாணவர்கள்! கௌரவித்த இளைஞர் சமூகம்

Report Print S.P. Thas S.P. Thas in கல்வி

கல்விப் பொதுத் தர உயர்தரப் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகள் எழுதிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச அச்செழு இளைஞர் கழகத்திற்கு உட்பட்ட எல்லையை சேர்ந்த 20 மாணவர்கள் 3 பாடங்களிலும் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச அச்செழு இளைஞர் கழகத்தால் கல்வியாளர் பாராட்டு விழா மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் கோப்பாய் அச்செழு இளைஞர் கழகம் நேற்றைய தினம் தைப்பொங்கலை முன்னிட்டு கல்வியாளர் பாராட்டு விழாவை நடத்தியுள்ளது.

இவ் நிகழ்வில் 3 பாடங்களில் திறமை சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 6 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

கோப்பாய் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் பகீரதன்(யாழ். பல்கலைக்கழக மாணவன்) தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபர் மோகன்ராஜன் கலந்து கொண்டார்.

இளைஞர் சமூகத்தின் கடுமையான உழைப்பினாலும், பல்வேறுபட்ட தடைகளுக்கும் மத்தியிலும் இந்த கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர் ரவிச்சந்திரன் பகீரதன் தெரிவித்துள்ளார்.