கிளிநொச்சியில் மூடப்பட்ட நிலையில் பாடசாலைகள்

Report Print Yathu in கல்வி

கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் மூடப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பதில் காலதாமதப்படுத்தி இருப்பதாக கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட கௌதாரிமுனை வித்தியாலயம், பல்லவராயன்கட்டு அ.த.க பாடசாலை, அத்தாய் முத்துத்தம்பி வித்தியாலயம், தம்பிராய் வித்தியாலயம், ஆகிய நான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இந்த நிலையில் பல்லவராயன்கட்டு பாடசாலையை மீள இயங்க வைப்பது தொடர்பில் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

கிளிநொச்சி கல்வி வலயத்தில் மூடப்பட்ட பாடசாலைகளை மீளத்திறப்பதற்கு வலயக்கல்வித் திணைக்களம் முயற்சி எடுத்து வருகின்றது.

இந்த நிலையில் பல்லவராயன் கட்டு பாடசாலையை மீள ஆரம்பிப்பதாக தீர்மானிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, இதனையண்டிய அயற்பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுவதுடன், இவ்வாண்டில் தரம் ஒன்றில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.

இப்பாடசாலையை ஆரம்பிக்கும் போது அயற் பாடாசலைகளும் பாதிக்கப்படும். இப்பாடசாலையை மீள இயக்குவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை.

அத்துடன் இப்பிரதேசத்தில் சனத்தொகை மிகக்குறைவாக காணப்படுவதனால் இப்பாடசாலையை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகைகளை தாமதப்படுத்தி இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers