பல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு

Report Print Mubarak in கல்வி

தற்போது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை குறித்த அனுமதிப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய அனுமதிப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.