5 பாடசாலைகளுக்கு விடுமுறை

Report Print Nivetha in கல்வி

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், 5 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 5 பாடசாலைகள் இன்றைய தினம் முதல் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி வரை முழுமையாக மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர வித்தியாலயம், மாத்தறை மத்திய கல்லூரி, குருணாகல் சீ. டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி மற்றும் பதுளை ஊவா மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, கல்வித் துறையில் முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடிகள் குறித்து கண்காணிப்பதற்கு ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 66 பேரால் கையொப்பமிடப்பட்ட மனுவொன்றின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.