பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

Report Print Samy in கல்வி

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை அகற்றும் வகையில் அவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர் குழுவினால் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து இன்று (25) பிற்பகல் ஆரம்பமானது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பல்வேறு வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, காலி வீதி - கொள்ளுப்பிட்டி சந்தி மூடப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு எதிராக, மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மேற்கொள்ளாதிருக்கும் வகையில் நுகேகொட மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் நேற்றைய தினம் (24) தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.