யாழ்.நூல் நிலையத்திற்கு தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் புத்தகங்கள்!

Report Print S.P. Thas S.P. Thas in கல்வி

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட யாழ்பாண நூலகத்துக்கு 1 லட்சம் புத்தகங்களை அரசு வழங்க உள்ளதாகவும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நூலகங்கள் மற்றும் தகவல் மையங்களின் முன்னேற்றத்துக்கான சர்வதேச தற்போதைய நிகழ்வுகள் என்ற தலைப்பில் சென்னை அண்ணா நூலகத்தில் தேசிய மாநாடு நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய அவர்,

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட யாழ்பாண நூலகத்துக்கு 1 லட்சம் புத்தகங்களை அரசு வழங்க உள்ளோம்.

இதேவேளை ஏனைய நாடுகளில் தமிழர்களில் அதிகம் வாழும் பகுதியில் உள்ள நூலகங்களுக்கு 2,500 முதல் 5,000 வரையில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் உள்ள 4,603 நூலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.