க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்திற்கான அடைவு மட்டம் குறைவு

Report Print Nivetha in கல்வி

கடந்தாண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் தோற்றியவர்களில் 51 சதவீதமானோர் மாத்திரமே ஆங்கில பாடத்தில் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில் ஆங்கில பாடத்திற்கான அடைவு மட்டம் குறைவாக இருக்கிறது எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஆங்கில பாடத்தில் ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் சாதாரண சித்தியை பெற்றுள்ளார்கள்.

மேலும், 31 ஆயிரத்து 619 பேர் அதிவிசேட சித்தியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.