க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Shalini in கல்வி

கல்வி பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு இறுதி பரீட்சையின் போது வழங்கப்படும் நேரத்தை விட மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதி பரீட்சையின் போது, வழங்கப்படும் நேரம் குறைவாக இருக்கின்றமை மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தெரிவு செய்வதற்காக மேலதிக நேரத்தை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாம் பகுதி 2 வினாத்தாளுக்காக மேலதிகமாக 15 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.