தரம் 2 வரை படித்த போலி பேராசிரியருக்கு சமாதான நீதவான் பதவி!

Report Print Kamel Kamel in கல்வி

போலியாக பேராசிரியர் என காட்டிக் கொண்ட மோசமான குற்றவாளி ஒருவருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேராசிரியர் ஜயவர்தன எம்.பி. அத்தநாயக்க என்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த நபர், வஹல விதானலாகே மஞ்சுள பிரசன்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த போலி பேராசிரியர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இவர் தெஹிவளை மத்திய மாஹா வித்தியாலத்தில் தரம் இரண்டு வரையிலேயே கல்வி கற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நபர் நேற்று வரையில் பாடசாலையின் விடுப்பு சான்றிதழைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எஹலியகொட பிரதேச பொலிஸார் இவருக்கு எதிராக நீதிமன்றில் மூன்று வழக்குகளைத் தொடர்ந்து சிறைத்தண்டனை அனுபவித்தவராவார்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி அமைச்சின் செயலாளரின் ஊடாக இவர் சமாதான நீதவான் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.