தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Nivetha in கல்வி

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் தரம் ஒன்றிற்கான பிள்ளைகளை இணைக்கும் விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், குறித்த விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்மாதம் 30ஆம் திகதி வரை தரம் ஒன்றிற்கான பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்வி அமைச்சினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.