கணித, விஞ்ஞான, வர்த்தக துறைகளுக்காக 45 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்

Report Print Mubarak in கல்வி
57Shares

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கணித, விஞ்ஞான, வர்த்தக துறைகளை ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் இன்னும் உயர்தரப் பிரிவில் கலைத்துறை மாத்திரமே காணப்படுகின்றது. இப்பாடசாலைக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட பல பாடசாலைகளில் இன்று அனைத்து துறைகளும் காணப்படுகின்றன.

இந்த நிலையில் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் மாத்திரம் கலைத்துறை காணப்படுவது கவலையளிக்கின்றது.

உயர்தரப் பிரிவில் கணித, விஞ்ஞான, வர்த்தக துறையில் கல்வி பயில்கின்ற தோப்பூர் மாணவர்கள் 45 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள திருகோணமலை நகர்புற பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே இந்த விடயத்தில் உரிய கல்விப்புலத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் கலைத்துறையோடு சேர்த்து கணித, விஞ்ஞான, வர்த்தக துறைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.