அச்சுவேலி சரஸ்வதி மகாவித்தியாலய புதிய வகுப்பறை தொகுதி திறப்பு!

Report Print Sumi in கல்வி

அச்சுவேலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிட தொகுதி நேற்று (16) திறந்து வைக்கப்பட்டது.

வகுப்பறைக் கட்டிடத்தினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ் சத்தியசீலன் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர்.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் சிபார்சின் கீழ், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 9.14 மில்லியன் ரூபா நிதியில் இந்த கட்டிடம் புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலை நூற்றாண்டினை கொண்டாடும் இந்த வேளையில், இவ் வகுப்பறைக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட இப்பாடசாலை ஸ்தாபகரின் பூட்டனார். சிவஸ்ரீ. கு.வை. வைத்தீஸ்வரக் குருக்கள் ஆகியோரினால் கடந்த வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த வருடம் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, விருந்தினர்கள், பாடசாலை ஸ்தாபகரின் பூட்டனார் சிவஸ்ரீ கு.வை. வைத்தீஸ்வரக் குருக்களினால் பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.