திருக்கோவில் வலயத்தின் இரண்டாம் தவணைப்பரீட்சை ஒத்திவைப்பு

Report Print V.T.Sahadevarajah in கல்வி

திருக்கோவில் வலயத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் தவணைப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை(28) கதிர்காமம் மற்றும் உகந்தைமலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இடம்பெறவிருப்பதனால், பரீட்சையை ஒத்திவைத்து சமய செயற்பாடுகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஈடுபட வழிவகை செய்யுமாறு அங்குள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டாம் தவணைப்பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.