சிங்கப்பூர் பயணமாகும் இலங்கை மாணவர்கள்!

Report Print Gokulan Gokulan in கல்வி

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கணிதப் போட்டிக்கு கிண்ணியா வலயம் சார்பாக கிண்ணியா மத்திய கல்லாரி, கிண்ணியா முஸ்லீம் மகளிர் மகாவித்தியாலய மாணவர்கள் சிங்கப்பூர் பயணமாகவுள்ளனர்.

இம் மாதம் 28 ஆம் திகதி எதிர்வரும் வியாழக்கிழமை இம்மாணவர்கள் சிங்கப்பூர் செல்லவுள்ளனர். இக் குழுவின் குழுத்தலைவராக ஆசிரியர் சியாத் நூகு நியமிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி அலுவலகத்தின் கணிதப் பிரிவு ஆலோசனை குழுவின் ஆசிரிய ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு நல்ல பல வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய கணித உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹசன் கணித ஆசிரிய ஆலோசகர் லாபிர் ஆகியோருக்கு நன்றிகளை இம் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.