மாணவர்களுக்கு களமாக அமைந்த மாணவர் பாராளுமன்ற தேர்தல்!

Report Print Gokulan Gokulan in கல்வி

கல்வி அமைச்சின் 2016/04 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று திகதி கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/கிண்/பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் . ஏ.ஆர்.சாதிக்கீன் தலைமையில் சிறப்பான முறையில்இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள தேர்தல் முறைகளை ஒத்தவையாகவும் மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாட்டுக்கு பாரியதொரு களமாக இது அமையப்பெற்றுள்ளது.

தேர்தல்கள் திணைக்களம் தேர்தல் ஆணையாளர் உட்பட வாக்குச் சாவடி வாக்கெண்ணும் நிலையங்கள் உத்தியோகத்தர்கள் என பல வகையான நடிபாகங்களையும் கொண்டு இடம்பெற்றதாக பாடசாலை அதிபர் இதன்போது தெரிவித்தார்.