நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

Report Print V.T.Sahadevarajah in கல்வி

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் 3இலட்சத்து 55ஆயிரத்து 326மாணவர்கள், 3050 பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதவுள்ளனர்.

இதேவேளை பரீட்சையின் முதல் பகுதி வினாத்தாள் காலை 9.30இற்கு வழங்கப்படும் என்பதால் பிள்ளைகளை 8.30 மணிக்கே பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை இரு பாடங்களுக்கிடையில் வரும் அரைமணி நேர இடைவேளையின்போது பெற்றோர்கள் பரீட்சை நிலையத்தினுள் செல்லமுடியாது என்பதால் அவர்களுக்குத் தேவையான தண்ணீர்ப்போத்தல் மற்றும் சிற்றுண்டி என்பவற்றை பரீட்சைக்கு செல்லும்போதே கொடுத்தனுப்ப வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத்பூஜித கேட்டுக்கொண்டுள்ளார்.