வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா

Report Print Theesan in கல்வி

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா இன்று கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநரின் உதவி செயலாளர் எஸ்.இ.ஜெ.செல்வநாயகம் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை குறித்த நிகழ்வின் போது பாடசாலை மாணவ, மாணவியருக்கு துவிச்சக்கர வண்டி, பாதணிகள், அப்பியாசப் புத்தகங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் வவுனியா வடக்கு பிரதி கல்வி பணிப்பாளர் மாலதி முகுந்தன், தொழில் அதிபர் விஜியேந்திரரத்தினம், ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers