அடுத்த ஆண்டு பாடசாலை சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர் பெறுமதி அதிகரிப்பு

Report Print Mubarak in கல்வி

அடுத்த ஆண்டு பாடசாலை சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர் கடந்த வருடத்திலும் பார்க்க கூடுதலான பெறுமதியைக் கொண்டதாக இருக்குமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர் சீருடைக்காக பண வவுச்சர் மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீருடைக்காக செலவிடப்படும் தொகைக்கு ஏற்ப புதிய பரிந்துரையைப் பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சின் மூலம் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...