வவுனியாவில் சாதனை படைத்த மாணவிக்கு கிடைத்த அதிஷ்டம்

Report Print Theesan in கல்வி

புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்ட மாணவி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜாவின் கல்வி நடவடிக்கைகளுக்கும், உயர் கல்வியைத் தொடர்வதற்கும் முற்று முழுதான நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சிவபுரம் அரசினர் தமிழக் கலவன் பாடசாலை மாணவி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜா 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளார்.

இதையடுத்து நேற்று பிற்பகல் மாணவியின் வீட்டிற்குச் சென்ற வவுனியா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் தமது வாழ்த்துக்களை மாணவிக்கு தெரிவித்துள்ளதுடன் குறித்த மாணவியின் கல்வி நடவடிக்கையினை, உயர் கல்வியைத் தொடர்வதற்கும் முற்று முழுதான நிதி உதவிகளை வழங்க முன் வந்துள்ளதாக வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 197 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ள வவுனியா சிவபுரம் மாணவி செல்வி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜாவினால் வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் வர்த்தக சங்கப்பிரதிநிதிகளாகிய நாங்களும் மகிழ்வடைகின்றோம். வர்த்தகர் சங்கமாகிய நாங்கள் இம் மாணவியின் உயர் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்க பொறுப்பேற்றுக் கொள்கின்றோம்.

தொடர்ந்தும் குறித்த மாணவி தனது கல்வியை தடையின்றி தொடர்ந்து எமது மாவட்டத்திற்கும் எமது தாய் நாட்டிற்கும் சேவையாற்ற முன்வரவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பாடசாலையில் 165 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட செல்வக்குமார் டிலானி மாணவியின் வீட்டிற்குச் சென்று மாணவியின் கற்றல் நடவடிக்கைத் தேவைகளுக்கு பண உதவிகளையும் வர்த்தகப் பிரதிநிதிகள் வழங்கி வைத்துள்ளனர்.

Latest Offers