வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்ற மாணவனின் இலட்சியம்

Report Print Yathu in கல்வி

நான் ஒரு பொறியியலாளராக மாறி ஏழைகளுக்கு சேவையாற்றுவதே எனது இலட்சியம் என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 2ஆம் இடத்தினை பெற்ற மாணவன் ஜெகநாதன் லதுர்சன் தெரிவித்துள்ளார்.

இவ் வருடத்திற்கான தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்த நிலையில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் மாணவன் லதுர்சன் 193 புள்ளிகள் பெற்று மாவட்ட ரீதியில் 2ஆம் இடத்தினை பிடித்துள்ளார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும் மாணவி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜா பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.