வரலாற்றில் முதன்முறையாக தமிழ் மாணவியால் பெற்றுக் கொடுக்கப்பட்ட பெருமை

Report Print V.T.Sahadevarajah in கல்வி

அதிகஷ்ட பாடசாலையான றாணமடு அகத்தியர் வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவியொருவர் சித்தி பெற்று பெருமையை தேடி தந்துள்ளார்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த ஐந்தாம் திகதி வெளிவந்தன.

இந்த நிலையில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி, மத்தியமுகாம் - 5 கமு/சது அகத்தியர் வித்தியாலயத்தில் முதல்முறையாக தமிழ் மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார்.

மத்தியமுகாம் - 6இனை சேர்ந்த சுதாகர் சபஸ்சிகா என்ற மாணவியே 172 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

இந்த பாடசாலையானது 2012ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 6 வருடங்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் எந்தவொரு சித்தியும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers