வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு கிடைத்த பெருமை

Report Print Theesan in கல்வி

வவுனியாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கடந்த ஆறு வருடங்களின் பின்னர் பாடசாலைக்குக் கிடைத்த உயர் புள்ளியாக இது பதிவாகியுள்ளது.

இன்று காலை பாடசாலை அதிபர் மற்றும் ஆரம்பப்பிரிவு பிரதி அதிபர்கள் தமது வாழ்த்துக்களை மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில் 193 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழியில் ஜெகநாதன் லதுர்ஷன் என்ற மாணவன் செல்வி சூசைப்பிள்ளை ஹெலன் ராஜேஸ்வரி ஆசிரியரின் வழிநடத்தலில் சித்தியடைந்துள்ளார்.