மரண விளிம்பிலும் சாதனை படைத்த வவுனியா மாணவனின் அபார திறமை

Report Print Theesan in கல்வி

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று வந்த சிவநேசன் விதுசன் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 173 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும் குறித்த மாணவன் இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

விவசாயம், தச்சுவேலை மேற்கொண்டு வரும் தந்தையின் பராமரிப்பிலும் உறவினர்களின் பங்களிப்பிலும் இவர் சிகிச்சை பெற்றுவருவதாக விதுசனின் தாயார் தெரிவித்துள்ளார்.

சிறந்த கல்வியையும் கடந்து சித்திரம் வரைவதில் குறித்த மாணவன் அபார திறமையுடையவனாக விளங்குகின்றான்.

வைத்தியசாலையில் இருக்கும் போது அவர் வரைந்த ஒரு புகைப்படத்தையும் அவரது தாயார் காண்பித்துள்ளார்.

இவ்வாறு இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 173 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாக கருதப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த மாணவனின் உடல் நலத்தில் அவதானத்துடன் செயற்படுமாறும் வேறு தொற்றுக்கு உட்படாமல் வைத்தியர்களின் தீவிர அவதானத்துடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.

மேலதிக சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுமாயின் இந்தியாவிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers