தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள்

Report Print Ashik in கல்வி

மாந்தை மேற்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகளும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றுள்ளன.

இதன்போது மடு கல்வி வலயத்திற்கு உற்பட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.