கொழும்பு மத்திய இந்து மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

Report Print Akkash in கல்வி

கொழும்பு மத்திய இந்து மகா வித்தியாலயத்தில் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற்றுள்ளது.

குறித்த பரிசளிப்பு விழாவானது இன்று காலை 9 மணியளவில் பாடசாலை பொது மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக ஓய்வு நிலைப் பேராசிரியர் மா.கருணாநிதி மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர், சிறப்பு விருந்தினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அறிவுடன் கூடிய உயர்கல்வித் திறன்களும், சிறந்த விழுமியங்களும், நிறைந்த அனுபம் ஆற்றல்களும் மிகுந்த மாணவர்களை உருவாக்கி சவால்களை எதிர்கொள்ள வழிகாட்டுவதே எமது பணிக்கூற்று எனும் சிந்தனைக்கு அமைய குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers