நாளைய தினம் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Report Print Gokulan Gokulan in கல்வி

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை தினம் விடுமுறை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.சத்தியேந்திரா தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் மத்திய மாகாண ஆளுனரின் அனுமதிக்கிணங்கவே நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுகிறது.

அத்துடன் இத்தினத்திற்கு பதிலாக எதிர்வரும் சனிக்கிழமையன்று பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சகல அதிபர்களுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers