மட்டக்களப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

Report Print Kumar in கல்வி

கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த தகைமை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு உன்னிச்சை நெடியமடு 6ஆம் மைல்கல் அதிபர் . எம் .பேரானந்தம் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது, 2018ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று வலயம், மாவட்டம், மாகாணம் மட்டத்தில் முதல் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 4ஆம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் ஜெயராஜ் துகிந்த் ரரேஷ்க்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2018ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலைய கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மத்திய வலய கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் , வலய பிரதி கல்விப்பணிப்பாளர் கே. ஹரிஹரன் , பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எச் எல் எம்.மீரா ஷாஹிப்பு ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers