உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வு

Report Print Theesan in கல்வி

வவுனியா - திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வு அதிபர் மீரா குணசீலன் தலைமையில் நடைபெற்றிருந்தது.

குறித்த கண்காட்சி நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 75, 000 பெறுமதியான பான்ட் வாத்திய உபகரணங்களும், சீருடையும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும் தற்போதைய உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், வவுனியா நகர சபையின் உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சந்திரேஸ்வரன், உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்களோடு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ், ஆற்றல் அரசி பனம் பொருள் உற்பத்தி நிலைய செயலாளர் நிலா, முன்பள்ளி ஆசிரியர், பெற்றோர்கள் என பெருந்திரளானோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Latest Offers