தமிழ் மொழி மூலம் சாதனை படைத்த யாழ். மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

Report Print Vethu Vethu in கல்வி

இவ்வாண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தினை பெற்ற மாணவனுக்கு வடமாகாண ஆளுநர் றெஜினொல்ட் குரே பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது பாராட்டு தெரிவித்ததுடன் பரிசில்களும் வழங்கி வைத்துள்ளார்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான ம.திகலொழிபவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.