கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைப்பு

Report Print Akkash in கல்வி

மேல் மாகாணசபை உறுப்பினர் கே.ரி.குருசாமியால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு புத்தபைகள் வழங்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு கொழும்பு - முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் ஜனநாயக மக்கள் முன்ணியின் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் நேற்றைய தினம் நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது பெருந்திரளான பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.