கிளிநொச்சியில் 6,018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

Report Print Suman Suman in கல்வி

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 6018 மாணவர்கள் தோற்றவுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

6018 மாணவர்களில் 3842 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும் 2176 பேர் வெளிவாரியாகவும் தோற்றுகின்றனர்.

இதற்காக 42 பரீட்சை நிலையங்கள், 10 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ஆறு இலட்சத்து 56,641 பரீட்சாத்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும், இதில் பாடசாலை பரீட்சாத்திகள் நான்கு இலட்சத்து 22,850 பேர் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக 4,661 பரீட்சை நிலையங்களும், 541 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என இலங்கை பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.