Oops. Something went wrong. Please try again later
Desktop

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

Report Print Thirumal Thirumal in கல்வி

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள 4661 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.

கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மலையகத்திலும் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்தவகையில், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றிருந்தனர்.

இதேவேளை பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers