ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி

Report Print Jeslin Jeslin in கல்வி

வெளியாகியுள்ள இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரு இலட்சத்து 67,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், 119 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம், கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 321,469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.