உயர்தரத்தில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவிகள் மூவர்- குவியும் பாராட்டுக்கள்

Report Print S.P. Thas S.P. Thas in கல்வி

உயர் தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி (பரந்தன்) முதல் நிலையினைப் பெற்றுள்ளார்.

இந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இணையத்தில் வெளியான பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலைகளைப் பெற்ற மாணவர்களின் விபரம் தற்போது கிடைத்திருக்கின்றன.

அதன்படி, விஞ்ஞானப் பிரிவில் பளை மத்திய கல்லூரி மாணவி க.அபிசிகா( முரசு மோட்டை ) முதல் இடத்தையும், வணிகப்பிரிவில் முருகானந்தா கல்லூரி மாணவி ஜனனி, கணிதப் பிரிவில் புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி முதல் இடத்தினையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சாதித்த மாணவிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இதேவேளை, http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். 119 பேரின் பெறுபேறுகள் வெளியீடு தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.